உள்ளூர் செய்திகள் (District)

மேலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட காய்கறி வியாபாரிகள். 

காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் திடீர் மறியல்-முற்றுகை

Published On 2022-07-18 09:13 GMT   |   Update On 2022-07-18 09:13 GMT
  • மதுரை மேலூரில் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் திடீர் மறியல், முற்றுகையில் ஈடுபட்டனர்.
  • காய்கறி வியாபாரிகள் சந்தைப்பேட்டை பகுதி வியாபாரம் செய்வதற்கு ஏற்ற இடம் இல்லை தெரிவித்தனர்.

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் செக்கடியில் நகராட்சிக்கு சொந்தமான தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

மார்க்கெட்டின் கட்டிடம் பழமையானது என்பதால் அதனை இடித்து புதிதாக கட்டிடம் கட்ட நகராட்சி முடிவு செய்தது. இதன் காரணமாக செக்கடி காய்கறி வியாபாரிகள் சந்தைப்பேட்டை உழவர் சந்தை பகுதியில் தற்காலிகமாக கடையை அமைத்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு காய்கறி வியாபாரிகள் சந்தைப்பேட்டை பகுதி வியாபாரம் செய்வதற்கு ஏற்ற இடம் இல்லை தெரிவித்தனர்.

இந்த நிலையில் காய்கறி வியாபாரிகள் சங்கத்தலைவர் மணவாளன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இன்று மேலூர் நகராட்சி அலுவலகத்தை முற்று கையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது நகர் பகுதியிலேயே கடை அமைத்துத்தர ஏற்பாடு செய்ய வேண்டுமென தெரி வித்தனர்.

இதுகுறித்து கமிஷனர் ஆறுமுகம், என்ஜினீயர் பட்டுராஜன், கவுன்சிலர் திவாகர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து போரா ட்டக்காரர்கள் திடீரென அங்கிருந்து புறப்பட்டு மதுரை-திருச்சி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News