உள்ளூர் செய்திகள்

மதுரை கூடலழகர் பெருமாள்கோவில் அருகே தென்மாட வீதியில் உள்ள கமல ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் இன்று யாகம் நடத்தப்பட்டது. 

ஆஞ்சநேயருக்கு வடை மாலை அணிவித்து வழிபாடு

Published On 2022-12-23 08:42 GMT   |   Update On 2022-12-23 08:42 GMT
  • மதுரை கைத்தல கமல ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது.
  • ஆஞ்சநேயருக்கு வடை மாலை அணிவித்து வழிபாடு நடந்தது.



மதுரை

மதுரையில் இன்று அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ள பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு 108 வடை மாலைகள் சார்த்தப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடந்தன.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதே போல் கூடலழகர் பெருமாள் கோவில் அருகே தென்மாட வீதியில் உள்ள கைத்தல கமல ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது.

இன்று கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது. முன்னதாக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வடை, வெற்றிலை மாலைகள் அணிவிக்கப்பட்டது.

இன்று இரவு ஆஞ்சநேயர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பூஜை ஏற்பாடுகளை கோவில் பட்டர் பாண்டுரங்கன் செய்திருந்தார்.

தல்லாக்குளம், சிம்மக்கல், டி.எம்.கோர்ட்டு சந்திப்பு, திருப்பரங்குன்றம் திருக்கூடல் மலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.

Tags:    

Similar News