உள்ளூர் செய்திகள்
உடன்குடி பகுதியில் 14 இடங்களில் மக்களை தேடி மருத்துவ முகாம்
- மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் உடன்குடி ஒன்றியத்தில் 14 இடங்களில் மக்கள் குழு சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
- திட்டத்தின் பயன்கள், மக்களின் சுகாதாரம், அவசர முதல் உதவிகள், முதியோர் பயன்பெறும் விதம் குறித்து மெஞ்ஞானபுரம் வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின் பேசினார்.
உடன்குடி:
தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் உடன்குடி ஒன்றியத்தில் 14 இடங்களில் மக்கள் குழு சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
மெஞ்ஞானபுரம் வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின் தலைமை தாங்கி மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் பயன்கள், மக்களின் சுகாதாரம், அவசர முதல் உதவிகள், முதியோர் பயன்பெறும் விதம் குறித்து பேசினார்.உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ் முன்னிலை வகித்தார்.வட்டார செவிலியர்கள் பேச்சியம்மாள், மணிமேகலை, உடன்குடி வட்டார தி.மு.க. வர்த்தக அணி அமைப்பாளர் ராஜேந்திரன், நகர மகளிரணி அமைப்பாளர் தேவி, உடன்குடிவட்டார காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜெயராமன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.