நாமக்கல் மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு விலை டன்னுக்கு ரூ.1000 சரிவு
- நாமக்கல் மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மரவள்ளிக் கிழங்கை பயிரிட்டுள்ளனர்.
- அதன்படி கடந்த மாதம் மரவள்ளி கிழங்கு டன் ரூ.8000-க்கு விற்பனையானது. தற்போது கடந்த சில நாட்க ளாக தொடர்ந்து மழை பெய்வதால் மரவள்ளி கிழங்கு வெட்டும் பணி பாதிக்கப்பட்டு, இந்த வாரம் டன் ஒன்றுக்கு ரூ.1000 குறைந்து, ரூ.7000-க்கு விற்பனையானது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் சேந்த மங்கலம், பேளுக்குறிச்சி, மேலப்பட்டி, கல்குறிச்சி, வெள்ளாளப்பட்டி, புதுசத்தி ரம், திருமலைபட்டி, எஸ்.உடுப்பம், சிங்களாந்தபுரம், கொல்லிமலை, கார வல்லி, கண்டாங்கி முத்துக்காப்பட்டி, பள்ளம்பாறை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மரவள்ளிக் கிழங்கை பயிரிட்டுள்ளனர்.
குறிப்பாக முள்ளுவாடி, தாய்லாந்து 226, வெள்ளை, வருஷ வெள்ளை, பர்மா, குங்கும ரோஸ் உள்பட பல்வேறு ரகங்களில் மரவள்ளிக் கிழங்கு பயிரிட்டுள்ளனர். இந்த பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்வது வழக்கம். புது சத்திரம், செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, பேளுக்கு றிச்சி, நாமகிரிப்பேட்டை, ஆத்தூர், மலை வேப்பங்குட்டை உட்பட பல பகுதிகளில் இயங்கி வரும் ஜவ்வரிசி ஆலைகளுக்கும் விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.
ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக்கி ழங்கில் உள்ள மாவு சத்துகள் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து
விவசாயிகளிடம் கொள்மு தல் செய்கின்றனர். அதன்படி கடந்த மாதம் மரவள்ளி கிழங்கு டன் ரூ.8000-க்கு விற்பனையானது. தற்போது கடந்த சில நாட்க ளாக தொடர்ந்து மழை பெய்வதால் மரவள்ளி கிழங்கு வெட்டும் பணி பாதிக்கப்பட்டு, இந்த வாரம் டன் ஒன்றுக்கு ரூ.1000 குறைந்து, ரூ.7000-க்கு விற்பனையானது. விலை சரிந்ததால் மர வள்ளி கிழங்கு பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மீண்டும் விலை உயர வாய்ப்புள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.