உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் நாளை அ.தி.மு.க. சார்பில் மே தின பொதுக்கூட்டம்-தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் அறிக்கை

Published On 2023-04-30 08:51 GMT   |   Update On 2023-04-30 08:51 GMT
  • அ.தி.மு.க. சார்பில் மேதின விழா பொதுக்கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
  • ஏரலில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் பத்திரப்பதிவு அலுவலகத்தை ஏரலிலேயே கட்டித்தர வேண்டும்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா ளரும், முன்னாள் அமைச்சரு மான எஸ்.பி.சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது:-

அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கம் சார்பில் உழைப்பாளர்கள் தினமான நாளை மே (1-ந்தேதி) தமிழகம் மற்றும் அ.தி.மு.க. செயல்படும் பிற மாநிலங்களில் மேதின விழா பொதுக்கூட்டம் நடத்திட அ.தி.மு.க. பொதுச்செய லாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.

அதனடிப்படையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மேதின விழா பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் நாளை மாலை 5 மணிக்கு அண்ணாநகர் சந்திப்பு, டூவிபுரம் 5-வது தெரு மெயின் ரோடு திடலில் சண்முகநாதன் (எனது) தலைமையில் நடைபெறுகிறது.

கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பி.ஜி.ராஜேந்திரன், மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், தலைமை கழக பேச்சாளர்கள் சரவணன், ராம கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்று கிறார்கள்.

கூட்டத்தில் தலைமை நிர்வாகிகளும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகளும், அண்ணா தொழிற்சங்கத்தி னரும் கலந்து கொள்கிறார்கள். இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, மாநகரப்பகுதி, பேரூராட்சி, மாநகர வட்ட, வார்டு மற்றும் கிளை நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், அண்ணா தொழிற்சங்க அனைத்து பிரிவு நிர்வாகிகள் மற்றும் தொழி லாளர்கள், தொண்டர்கள், மகளிர்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

ஏரலில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் பத்திரப்பதிவு அலுவலகத்தை ஏரலிலேயே கட்டித்தர வேண்டும். ஏரல் தாலுகா அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் இன்னும் பல அரசு அலுவலகங்கள் அமைக்க போதிய இட வசதி உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி பத்திர பதிவு அலு வலகத்தை அவ்விடத்திலேயே கட்டித் தர வேண்டும். வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏரல் காந்தி சிலை முன்பு நாளை காலை 10 மணிக்கு சண்முகநாதன் (எனது) தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வினர் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News