உள்ளூர் செய்திகள் (District)

விருத்தாசலத்தில் நடந்த செஸ்போட்டியில் கலந்துகொண்டவர்களை படத்தில் காணலாம்.

விருத்தாசலத்தில் செஸ்போட்டியில் சாதனை படைத்தவர்களுக்கு பதக்கம்

Published On 2022-07-21 07:10 GMT   |   Update On 2022-07-21 07:10 GMT
  • விருத்தாசலத்தில் செஸ்போட்டியில் சாதனை படைத்தவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
  • செஸ் போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் நிலை பெற்ற 137 மாணவர்கள் பங்குபெற்றனர்.

கடலூர்:

உலக செஸ் தினம் மற்றும் சென்னையில் நடைபெறும் 44வது நடைபெறும் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செஸ் போட்டி நடைபெற்றது. உலக செஸ் தினம் மற்றும் சென்னையில் வருகிற 28ம் தேதி தொடங்க உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வட்டார அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.

இப்போட்டியை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். மேலும் மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை பள்ளிகளில் பயிலும், செஸ் போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் நிலை பெற்ற 137 மாணவர்கள் பங்குபெற்றனர். போட்டியில் முதல் 3 இடம் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர்கள் ராஜேஸ்வரி, விமலா, வட்டார வளமை மேற்பார்வையாளர் செந்தில்குமார், உதவி தலைமையாசிரியர் கலையரசன், உடற்கல்வி அலுவலர்கள் ராஜராஜசோழன், பிரகாசம், தியாகு உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News