உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.

நெல்லை அருகே கிராம உதயம் சார்பில் மருத்துவ முகாம்

Published On 2022-11-22 10:35 GMT   |   Update On 2022-11-22 10:35 GMT
  • கோபால சமுத்திரம் கிராம உதயம் தலைமை அலுவலகம் சார்பில் இன்று மருத்துவ முகாம் நடைபெற்றது.
  • முகாமில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

நெல்லை:

நெல்லை மேலச்செவல் அருகே உள்ள வாணியன்குளம் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நெல்லை அரசு மருத்துவமனை, பத்தமடை, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கோபால சமுத்திரம் கிராம உதயம் தலைமை அலுவலகம் சார்பில் இன்று மருத்துவ முகாம் நடைபெற்றது.

மேலச்செவல் பேரூராட்சி மன்றத் தலைவர் அண்ணபூரணி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் மற்றும் கிராம உதயம் ஆடிட்டர் அந்தோனி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் வரவேற்று பேசினார். முகாமில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். அரசு மருத்துவர் ஷைலா தலைமையில் பத்தமடை ஆரம்ப சுகாதார அலுவலர் செய்யது சுலைமான், சுகாதர ஆய்வாளர்கள் பூங்கொடி , லிபின் மற்றும் மருத்துவ குழுவினர்கள் பொதுமக்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், பொது மருத்துவம், உடல் பரிசோதனைகள் செய்து அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளையும், மருந்து, மாத்திரைகளையும் இலவசமாக வழங்கினர்.நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர் தங்கம், கிராம உதயம் மருத்துவ பொறுப்பாளர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் அருள் முருகன் கோபால் நன்றி கூறினார்.

Tags:    

Similar News