உள்ளூர் செய்திகள்

மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் திட்டம்-அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

Published On 2022-06-05 10:30 GMT   |   Update On 2022-06-05 10:30 GMT
  • அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தனர்.
  • உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கந்தசாமிபுரத்தில் அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், (திட்டம்) ரங்கநாதன் உதவி ஆணையர்கள் சேகர், ராமச்சந்திரன், மாநகராட்சி நகர்நல அலுவலர் அருண்குமார், சுகாதார துறை அதிகாரி ஸ்டாலின் பாக்கியநாதன், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் நிர்மல் ராஜ், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அந்தோணி கண்ணன்,

தொண்டரணி துணை செயலாளர் ராமர், மாநகர வர்த்தக அணி துணை செயலாளர் கிறிஸ்டோபர் , விஜயராஜ், கவுன்சிலர்கள் கற்பக கனிசேகர், ஜான்சிராணி, நாகேஸ்வரி, அந்தோனி பிரகாஷ்மார்சல், தெய்வேந்திரன், வட்டச் செயலாளர் சதிஷ் குமார், சுகாதார ஆய்வாளர் ஹரி கணேஷ்,

போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை செயலாளர் அல்பர்ட், பிரதிநிதிகள் பிரபாகர் லிங்க ராஜ், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி மற்றும் மணி, ஜோஸ்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநகராட்சி முழுவதும் 400 இடங்களில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

Tags:    

Similar News