உள்ளூர் செய்திகள் (District)

அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த போது எடுத்தபடம்.

தூத்துக்குடி 36-வது வார்டு பகுதியில் பொதுமக்களிடம் குறைகள் கேட்ட அமைச்சர் கீதாஜீவன்

Published On 2023-08-29 09:00 GMT   |   Update On 2023-08-29 09:00 GMT
  • தூத்துக்குடி மாநகராட்சி 36-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் மக்கள் குறைகேட்பு முகாம் நடைபெற்றது.
  • விடுபட்ட பகுதிக்கும் முழுமையாக சாலை, கால்வாய் வசதிகள் அமைத்து தரப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.

அதன்படி மாநகராட்சி 36-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் மக்கள் குறைகேட்பு முகாம் நடைபெற்றது. கக்கன் பூங்கா அருகே உள்ள சுப்பையா 2-வது தெரு மற்றும் 3-வது குறுக்குத்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் அமைச்சர் கீதாஜீவன் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் பொதுமக்களிடம் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகள் அனைத்தும் 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் முறையாக நடைபெறாமல் இருந்ததால் பல்வேறு குறைபாடுகள் தற்போது கண்டறியப்பட்டு ள்ளது.

அதை அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி அனைத்து குறைகளையும் முழுமையாக நிறைவேற்றி தருவேன். இந்த பகுதிக்கு தி.மு.க. ஆட்சி வந்த பிறகு புதிய தார்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. விடுபட்ட பகுதிக்கும் முழுமையாக சாலை, கால்வாய் வசதிகள் அமைத்து தரப்படும். குடிநீர் சீரான முறையில் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், செயற்பொறியாளர் பாஸ்கர், பொறியாளர் சரவணன், உதவி ஆணையர் சேகர், கவுன்சிலர் விஜய லட்சுமி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரதீப், அரசு வக்கீல் ஆனந்த காபிரியேல்ராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளார் பிரபு, வட்டச்செயலாளர் செல்வராஜ், வட்டப்பிரதிநிதி துரை, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார் மற்றும் பாஸ்கர், மணி, அல்பட், மகேஸ்வரசிங், மாநகராட்சி ஆணையரின் நேர்முக உதவியளார் துரைமணி, அரசுதுறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News