உள்ளூர் செய்திகள்

கொள்முதல் நிலையத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்து நெல் கொள்முதலை தொடங்கி வைத்தார்.

பில்லாளி ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்- அமைச்சர் திறந்து வைத்தார்

Published On 2023-01-21 08:47 GMT   |   Update On 2023-01-21 08:47 GMT
  • 50 குழந்தைகளுக்கு கம்பு, நெய் உள்ளிட்ட 7 பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. மாபெரும் வெற்றிபெறும்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம், திருமருகல் அடுத்த பில்லாளி ஊராட்சியில் ரூ.28 லட்சம் மதிப்பில் புதிதாய் கட்டப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்து நெல் கொள்முதலை தொடங்கி வைத்தார்.

பின் 50 குழந்தைகளுக்கு கம்பு, நெய் உள்ளிட்ட 7 பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் கூறுகையில்:-

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 20 மாதம் சிறப்பாக நடத்தி வருவதால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. மாபெரும் வெற்றிபெறும் என்றார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், ஷா நவாஸ் எம்.எல்.ஏ. மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News