உள்ளூர் செய்திகள்

தாய் சேய் நல கண்காணிப்பு மையத்தை நடிகர் சசிகுமார் பார்வையிட்டார்.

அனைத்து மாவட்டங்களிலும் தாய் சேய் நல கண்காணிப்பு மையம் தொடங்க வேண்டும்- நடிகர் சசிகுமார் பேட்டி

Published On 2023-03-07 10:04 GMT   |   Update On 2023-03-07 10:04 GMT
  • தஞ்சாவூரில் மொத்தமாக 1212 கர்ப்பிணி பெண்கள் உள்ளனர்.
  • மையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு கர்ப்பிணி பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாநகராட்சியில் கடந்த 3-ம் தேதி தாய் சேய் நலம் கண்காணிப்பு மையம் திறக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த மையத்தை நடிகர் சசிகுமார் நேற்று மாலை பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்–களிடம் கூறியதாவது:-

தஞ்சாவூரில் படப்பிடிப்பில் இருந்தேன்.

இங்கு தொடங்கப்பட்டுள்ள இந்த மையத்தை பார்வை–யிட்டேன்.

இந்த திட்டமானது பெண்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். கர்ப்பிணி காலங்களில் பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்தினை இந்த திட்டத்தின் மூலம் மாநகராட்சி மேயர் அனைத்து பெண்களுக்கும் வழங்கி வருகிறார்.

தஞ்சாவூரில் மொத்தமாக 1212 கர்ப்பிணி பெண்கள் உள்ளனர்.

அவர்கள் அனைவரையும் கண்டறிந்து அவர்களுக்கு கர்ப்ப காலத்தில் தேவைப்படும் அனைத்து மருத்துவ சேவைகள் மற்றும் ஊட்டச்–சத்துக்கள் அனைத்தும் வீடுகளுக்கு நேரடியாக சென்றும் இங்கு வர வைத்தும் வழங்கப்பட்டு வருகிறது.

தஞ்சையில் தொடங்கியது போல அனைத்து மாவட்டங்–களிலும் தாய் சேய் நலம் கண்காணிப்பு மையம் தொடங்க வேண்டும்

கர்ப்பிணி காலங்களில் தாய் மற்றும் குழந்தையை காப்பாற்றுவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.

இந்த மையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு கர்ப்பிணி பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் பேசினேன். இந்த திட்டம் எங்களுக்கு மிக பயனுள்ளதாக உள்ளது.

இந்தத் திட்டத்தை நிறைவேற்றி தந்த தஞ்சை மாநகராட்சி மேயருக்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள் என்று அவர் கூறினார்.

பேட்டியின் போது மேயர் சண்.ராமநாதன், பேட்டியின் போது மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி, இளநிலை பொறியாளர் ஜெகதீசன், கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News