உள்ளூர் செய்திகள்

அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அய்யா நாராயணசாமி பவனி வந்த காட்சி.

முக்கூடல் நாராயணசாமி கோவில் ஆடித்திருவிழா

Published On 2022-08-07 08:48 GMT   |   Update On 2022-08-07 08:48 GMT
  • பிரசித்திப்பெற்ற முக்கூடல் நாராயணசாமி கோவில் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
  • இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது.

முக்கூடல்:

பிரசித்திப்பெற்ற முக்கூடல் நாராயணசாமி கோவில் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து வருகிற 14-ந் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. 1-ம் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு வருஷாபிஷேகம், கோபுர கொடி ஏற்றம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. மாலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தவாரி எடுத்து வரப்பட்டது. இரவில் சப்பர பவனி நடைபெற்றது.

திருவிழாவை முன்னிட்டு தினசரி மாலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தவாரி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலை வந்தடையும்.

அதனை தொடர்ந்து இரவில் நாராயணர் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்த்தில் முக்கூடல் நகரை வலம் வருதல் நடைபெறுகிறது. 10-ம் திருநாள் அன்று லட்சுமி நாராயணர் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம்.

திருவிழாவை முன்னிட்டு தினமும் இரவு 7 மணி முதல் 10 மணி வரை சொற்பொழிவு, விழிப்புணர்வு நிகழ்ச்சி, பக்தி இசை, இலக்கிய சொற்பொழிவு, பட்டிமன்றம், பேச்சுப்போட்டி, சிலம்பம் நடைபெறுகிறது.

13-ந் தேதி இரவு சிவச்சந்திரனின் அய்யாவழி இசை வழிபாடு, விடிய, விடிய அன்னதானம் நடைபெறும். மேலும் அனுமன் ஆட்டம், மாடு, மயில் ஆகிய ஆட்டங்கள் ஆகியவை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ விஷ்ணு சபையார், கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர். 

Tags:    

Similar News