உள்ளூர் செய்திகள் (District)

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டபோது எடுத்த படம்.

கொளத்தூர் பேரூராட்சியில் 'எனது நகரம் எனது பெருமை' விழிப்புணர்வு முகாம்

Published On 2022-07-21 06:20 GMT   |   Update On 2022-07-21 06:20 GMT
  • சேலம் மாவட்டம் கொளத்தூர் பேரூராட்சியில் எனது நகரம் எனது பெருமை மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
  • இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பலரும் கலந்து கொண்டார்கள்.

மேட்டூர்:

சேலம் மாவட்டம் கொளத்தூர் பேரூராட்சியில் எனது நகரம் எனது பெருமை மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இதை முன்னிட்டு கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ -மாணவிகளுக்கு இடையே கொளத்தூர் நகரத்தை தூய்மையான நகரமாக வைத்துக் கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் இது சம்பந்தமாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பேரூராட்சி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். துணைத்தலைவர் கோவிந்தம்மாள், பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பலரும் கலந்து கொண்டார்கள்.

மேலும் பொருட்கள் வாங்க கடைகளுக்கு செல்லும் பொழுது மஞ்சள் பையை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பது என்ற கருத்தும் இந்நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News