உள்ளூர் செய்திகள்

பதக்கங்களுடன் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள்.

கராத்தே போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு

Published On 2022-06-10 07:10 GMT   |   Update On 2022-06-10 07:10 GMT
  • ஆயக்காரன்புலம் இரண்டாம் சேத்தியில் ஊராட்சி மன்றம் சார்பாக 50 -க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு இலவச கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
  • தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தேயில் பங்கேற்று 10 பேர் முதல்பரிசினையும் 5 பேர் இராண்டாம் பரிசுகளையும் பெற்று சாதனை படைத்தனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் இரண்டாம் சேத்தியில் ஊராட்சி மன்றம் சார்பாக 50 -க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு இலவச கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தேயில் பங்கேற்று 10 பேர் முதல்பரிசினையும் 5 பேர் இராண்டாம் பரிசுகளையும் பெற்று சாதனை படைத்தனர்.

வெற்றிபெற்று ஊர் திரும்பிய மாணவ-மாண விகளை ஆயக்காரன்புலம் 2 ஊராட்சி மன்ற தலைவர் ராமையன், ஆயக்காரன்புலம் நான்காம் சேத்திஊராட்சி மன்றத் தலைவர் தமிழரசிமற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பெற்றோர்கள், கிராம மக்கள் சால்வை அணிவித்து மாலை அணிவித்து வரவேற்பு அளித்து பாராட்டினர். 

Tags:    

Similar News