நாமக்கல்லில், இலவச கட்டாய கல்வி சட்டத்தில்குலுக்கல் முறையில் 1,600 மாணவர்கள் சேர்க்கை
- கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ், நடப்பு கல்வி ஆண்டில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில், மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், கடந்த, ஏப்ரல் மாதம் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது.
- 103 பள்ளிகளில், நிர்ணயம் செய்யப்பட்ட இடங்களைக் காட்டிலும், கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
நாமக்கல்:
கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ், நடப்பு கல்வி ஆண்டில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில், மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், கடந்த, ஏப்ரல் மாதம் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது.
அதன்படி 145 தனியார் பள்ளிகளில், 25 சதவீதம் இடஒதுக்கீட்டில் சேர்க்கை பெற 1,892 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், 103 பள்ளிகளில், நிர்ணயம் செய்யப்பட்ட இடங்களைக் காட்டிலும், கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
மீதம் உள்ள, 42 தனியார் பள்ளிகளில், இருக்கின்ற இடங்களுக்கு ஏற்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதை யடுத்து, குலுக்கல் முறையில் மாணவ, மாணவிகள் சேர்க்கை பெற 103 பள்ளிக ளில் சிறப்பு முகாம் நடந்தது.
அதற்காக, ஒவ்வொரு தனியார் பள்ளிகளுக்கும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட்டனர்.
மேலும், அரசு விதிமுறைகளைப் பின்பற்றி குலுக்கல் நடக்கிறதா என்பதை கண்காணிக்கவும், மாவட்ட கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில், நுழைவு நிலை வகுப்பில் சேர்க்கை பெற, 1,600 மாணவ, மாணவியர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல், 42 தனியார் பள்ளிகளில், 25 சதவீதம் இடஒதுக்கீட்டின் கீழ், நேரடியாக மாணவ, மாண வியர் தேர்வு செய்யப்பட்ட னர் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.