உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்ட போது எடுத்த படம்.

திருச்செங்கோடு வேளாண்மை துறை சார்பில் கரும்பு சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி

Published On 2023-08-12 06:54 GMT   |   Update On 2023-08-12 06:54 GMT
  • கரும்பு விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி பற்றிய பயிற்சி பட்லூர் பொன்னி சர்க்கரை ஆலையின் கரும்பு அலுவலகத்தில் நடைபெற்றது.
  • வேளாண்மை அலுவலர் குழந்தைவேல் வரவேற்புரை வழங்கி கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றியும், வேளாண் துறையின் மானியத் திட்டங்கள் பற்றியும் கூறினார்.

திருச்செங்கோடு:

திருச்செங்கோடு வட்டாரம் பட்லூர் கிராம கரும்பு விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி பற்றிய பயிற்சி பட்லூர் பொன்னி சர்க்கரை ஆலையின் கரும்பு அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல் வரவேற்புரை வழங்கி கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றியும், வேளாண் துறையின் மானியத் திட்டங்கள் பற்றியும் கூறினார். பொன்னி சர்க்கரை ஆலையின் கரும்பு மேலாளர் கோபிநாத் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி தொழில் நுட்பங்கள், கட்டைப்பயிர் பராமரிப்பு, நாற்றங்காலில் தரமான நாற்று உற்பத்தி, சொட்டு நீரில் கரும்பு சாகுபடி தொழில் நுட்பங்கள், இயந்திர அறுவடை செய்வதற்குரிய தொழில்நுட்பங்கள், கரும்பு எண்ணிக்கை பராமரித்தல் பற்றி கூறினார்.

வட்டார தொழில்நுட்ப மேலாளர் கிருஷ்ணசாமி உழவன் செயலி பற்றி பற்றியும், ஆத்மா திட்டம் பற்றியும் கூறினார். பட்லூர் கோட்ட கரும்பு மேலாளர் அருள் முருகன் கரும்பில் பூச்சி நோய் கட்டுப்பாடு பற்றி கூறினார். இப்ப பயிற்சியில் உதவி தொழில்நுட்ப மேலாளர் சக்திவேல், கரும்பு அபிவிருத்தி அலுவலர் அர்ஜுனன், மற்றும் பட்லூர் கரும்பு அலுவலர்கள் உட்பட 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News