உள்ளூர் செய்திகள்
பள்ளிபாளையம் பாலத்தில் மீன் பெட்டிகள் வைப்பதால் சுகாதார கேடு
- பள்ளிபாளையம் பகுதியில் ஏராளமான மீன் கடைகள் உள்ளது.
- இந்த மீன் கடைகளுக்கு தேவை யான மீன்கள் கண்டெய்னர் லாரி மூலம் கொண்டு வரப்படுகிறது.
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் பகுதியில் ஏராளமான மீன் கடைகள் உள்ளது. இந்த மீன் கடைகளுக்கு தேவை யான மீன்கள் கண்டெய்னர் லாரி மூலம் கொண்டு வரப்படுகிறது. இந்த கண்டெய்னர் லாரிகளை, பள்ளிபாளையம் பகுதியில் உள்ள பாலத்தில் பல மணி நேரம் நிறுத்தி விடுகின்றனர். அப்போது கண்டெய்னர் லாரியின் உள்ளே இருந்து வெளியேறும் தண்ணீர் அப்பகுதியில் துர்நாற்றத்துடன் பரவலாக தேங்கி விடுகிறது.
மேலும் கண்டெய்னர் லாரியிலிருந்து இறக்கப்பட்ட மீன் பெட்டியும் வரிசையாக அடுக்கி வைக்கப்படுவ தாலும், துர்நாற்றம் வீசுகிறது. அந்த சமயத்தில் வாகனத்தில் செல்வோர்கள் மிகவும் அவதிப் படுகின்ற னர். மேலும் போக்கு வரத்துக்கு இடையூறும் ஏற்படுகிறது.
இது குறித்து முன்னாள் கவுன்சிலர் செல்வம், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, நகராட்சி சேர்மன், துணை சேர்மனிடம் புகார் தெரிவித்தார்.