வாழப்பாடி அருகே பழுதடைந்து கிடக்கும் கொட்டவாடி சாலை புதுப்பிக்கப்படுமா?
- பேளூர் கரடிப்பட்டி கிராமங்கள். அரு கருகே அமைந்துள்ள இந்த இரு கிராமங்களிலும் ஏறக்கு றைய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
- கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஏறக்குறைய, 1 கி.மீ தொலைவுள்ள செல்லியம்மன் கோவில் தார்சாலை வழியாக பேளூர் ஏத்தாப்பூர் சாலையை அடைகின்றனர்.
வாழப்பாடி:
பெத்தநாயக்கன் பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்டது கொட்டவாடி மற்றும் பேளூர் கரடிப்பட்டி கிராமங்கள். அரு கருகே அமைந்துள்ள இந்த இரு கிராமங்களிலும் ஏறக்கு றைய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஏறக்குறைய, 1 கி.மீ தொலைவுள்ள செல்லியம்மன் கோவில் தார்சாலை வழியாக பேளூர் ஏத்தாப்பூர் சாலையை அடைகின்றனர்.
இதுமட்டுமின்றி, படையாச்சி யூர், கல்யாண கிரி, கல்லே ரிப்பட்டி கிரா மங்களைச் சேர்ந்த மக்கள் இச்சாலை வழியா கவே, வாழப்பாடி மற்றும் பேளூர் பேரூராட்சி பகுதிகளுக்கு பயணித்து வருகின்றனர்.
சாலை பழுது
5 கிராமங்களையும், வாழப் பாடி, ஏத்தாப்பூர் மற்றும் பேளூர் பேரூராட்சி கள் மட்டுமின்றி, கல்வ ராயன்மலை, அருநுாற்று மலை சாலைகளோடு இணைக்கும் பிரதான சாலையாக இருந்து வரும் கொட்டவாடி செல்லி யம்மன் கோவில் சாலை, பல ஆண்டுகளாக பரா மரிப்பின்றி குண்டும், குழியுமாக பழுதடைந்து காணப்படுகிறது
இந்த சாலையில் பய ணிக்க முடியாமல் 5 கிராம மக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, பழுதடைந்து கிடக்கும் கொட்டவாடி செல்லி யம்மன் கோவில் தார்சாலையை புதுப்பிக்க பெத்தநாயக்கன்பா ளையம் ஊராட்சி ஒன்றிய அதி காரிகள் மற்றும் மக்கள் பிரதி நிதிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை விடுத்துள்ளனர்.