சேலம் மாவட்ட கோர்ட்டுகளில்தேசிய மக்கள் நீதிமன்றம்
- ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலும் மற்றும் சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர் மற்றும் ஓமலூர் வட்டார நீதிமன்றங்களிலும், தேசிய மக்கள் நீதிமன்றம் வருகிற 13-ந்தேதி(சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
- மக்கள் நீதிமன்றம் மூலமாக தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு, செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணம் முழுமையாகத் இருப்பி கொடுக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டசட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான எஸ்.சுமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதல்படி சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலும் மற்றும் சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர் மற்றும் ஓமலூர் வட்டார நீதிமன்றங்களிலும், தேசிய மக்கள் நீதிமன்றம் வருகிற 13-ந்தேதி(சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
மக்கள் நீதிமன்றத்தில் சமரசம் செய்துக் கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கி கடன்கள், கல்வி கடன்கள் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவாகரத்து தவிர்த்த மற்ற குடும்பப் பிரச்னைகள் தொடர்பான வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள், உரிமையியல் வழக்குகள் (நிலம், சொத்து, பாக பிரிவினை வாடகை விவகாரங்கள்), விற்பனைவரி, வருமான வரி, சொத்துவரி பிரச்சனைகள் பேச்சுவார்த்தை மூலம் சமரச முறையில் தீர்வு காணப்படும்.
மக்கள் நீதிமன்றம் மூலமாக தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு, செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணம் முழுமையாகத் இருப்பி கொடுக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. எனவே, பொதுமக்கள் தேசிய மக்கள் நீதிமன்றத்தை பயன்படுத்தி தங்கள் வழக்குகளுக்கு விரைவாகவும், சமரச முறையிலும் தீர்வு காணலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.