உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் பள்ளி மாணவ-மாணவிகளின் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

Published On 2023-10-08 09:02 GMT   |   Update On 2023-10-08 09:02 GMT
  • ராஜீவ் நகர் பிரதான சாலையை சுத்தப்படுத்தும் பணியில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து மாணவிகள் தூய்மைபணியில் ஈடுபட்டனர்.
  • முகாம் நாட்களில் மதிய வேளையில் மாணவிகளுக்கு யோகா பயிற்சி, போட்டி தேர்விற்கான விழிப்புணர்வு, கைவினை பயிற்சி ஆகியவை வழங்கப்பட்டன.

தூத்துக்குடி:

தூத்துக்குடி புதிய துறைமுகம் மேல்நிலை பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் 7 நாள் சிறப்பு முகாம் எம்.சவேரியார்புரம் புனித அந்தோணியார் உயர் நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தலைமை ஆசிரியை ஷர்மிளா ஜெனித்தா முகாமை தொ டங்கி வைத்தார். முகாமின் போது முள்ளக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சூர்யகுமார் முதல்-அமைச்சரின் மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து விளக்கினார். முகாம் நாட்களில் பனைவிதைகள் சேகரி க்கப்பட்டு விதைக்க ப்பட்டது. ராஜீவ் நகர் பிரதான சாலையை சுத்தப்படுத்தும் பணியில் மாநகராட்சி துப்புரவு பணி யாளர்களுடன் இணைந்து மாணவிகள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

மேலும் டெங்கு ஒழிப்பு, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை தெற்கு மண்டல உதவி ஆணையர் சந்திரமோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் தூத்துக்குடி மாநகராட்சி 57-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜெயலெட்சுமி, முன்னாள் கவுன்சிலர் சுடலைமணி மாணவி களுடன் இணைந்து துண்டு பிரசுரங் களை மக்களுக்கு வழங்கினர். டெங்கு விழிப்புணர்வு பேரணி ராஜீவ்நகர் பகுதியில் நடைபெற்றது. இதில் 58-வது மாநகராட்சி மாமன்ற உறுப்பி னர் பச்சிராஜ், தலைமை ஆசிரியை ஷர்மிளா ஜெனித்தா கலந்து கொண்டனர்.

நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளியின் தாளாளர் செல்வ ஜார்ஜ் அடி களார், தலைமை ஆசிரி யை அன்ன மாணிக்கம், மாமன்ற உறுப்பினர் ஜெய லெட்சுமி, தலைமை ஆசிரி யை ஷர்மிளா ஜெனித்தா, முதுகலை ஆங்கில ஆசிரியர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைத்து நாட்களிலும் மதிய வேளையில் மாணவிகளுக்கு யோகா பயிற்சி, போட்டி தேர்விற்கான விழிப்புணர்வு, மருத்துவரின் அறிவுரை, ஊக்கமூட்டும் உரைகள், ஓவியம், கைவினை பயிற்சி ஆகியவை வழங்கப்பட்டன. 7 நாள் முகாம் ஏற்பாடு களை திட்ட அலுவலர் சொக்கலிங்கம், உதவி திட்ட அலுவலர் திருமலைக்குமார் செய்திருந்தனர்.

Tags:    

Similar News