நாட்டின மீன் குஞ்சுகளை ஆறுகளில் விடும் திட்டம்
- மீன் குஞ்சுகளை ரூ.1. 24 கோடி செலவில் ஆறுகளில் இருப்பு செய்திடும் பணி நடைபெற்று வருகிறது.
- ஒகேனக்கல் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒகேனக்கல்,
தமிழ்நாட்டில் மாட்டு மீன் வளங்களை பாதுகாத்து பெருக்கிட ஆறுகளின் மீன் குஞ்சுகள் திட்டத்தின் கீழ் மொத்தம் 40 லட்சம் மீன் குஞ்சுகளை ரூ.1. 24 கோடி செலவில் ஆறுகளில் இருப்பு செய்திடும் பணி நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக ஒகேனக்கல் பகுதியில் மீன் பிடிக்கும் தொழிலாளர்களின் வருவாய் கணிசமாக அதிகரிக்க வேண்டுமென்ற நோக்கிலும், நாட்டு மீன் இனங்கள் முற்றிலுமாக அழிந்து விடாமல் பாதுகாத்து பெருக்கி அவற்றை அடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்துச் சென்றிடும் பொருட்டும் ஒகேனக்கல் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நாட்டு மீன் குஞ்சுகளான செல்கண்டை, கல்பாசு, கட்லா, ரோகு, மிர்கால் ஆகிய நாட்டு மீன் குஞ்சுகளை மீன்வள அதிகாரிகள் முதலைப் பண்ணை அருகே உள்ள ஆற்றில் விட்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஒகேனக்கல்லில் உள்ள மீனவர்கள் மற்றும் கட்சியினர், அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.