உள்ளூர் செய்திகள் (District)

தெப்பத்திருவிழா.

கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் நவராத்திரி தெப்ப திருவிழா

Published On 2022-10-05 09:54 GMT   |   Update On 2022-10-05 09:54 GMT
  • கொலுவில் வீற்றிருக்கும் அம்பாளுக்கு இலட்சார்ச்சனையும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
  • காலை சரஸ்வதி பூஜை சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

மெலட்டூர்:

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள திருக்கருகாவூர் முல்லைவனநாதர் சமதே கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் கோவிலில் நவராத்திரிவிழா நடைபெற்றது

நவராத்திரி விழாவை முன்னிட்டு கர்ப்பரட்சாம்பிகை அம்பாளுக்கு கடந்த 26-ந்தேதி இரவு இலட்சார்ச்சனையுடன் தொடங்கி தினந்தோறும் இரவு கொலுவில் வீற்றிருக்கும் அம்பாளுக்கு இலட்சார்ச்சனையும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.

30-ந்தேதி ஏகதின லட்சார்ச்சனையும், 4ந்தேதி காலை சரஸ்வதி பூஜை சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை 4 மணியளவில் சுவாமி சந்திரசேகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சியும், இரவு 9மணிக்கு ஷீரகுண்டம் எனும் திருக்குளத்தில் தெப்பத்திருவிழா நிகழ்ச்சியும் நடைபெற்றது

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்து தெப்பத்திருவிழா நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் ஆசைத்தம்பி மேற்பார்வையில் கோயில் பணியாளர்கள், கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News