உள்ளூர் செய்திகள்

சின்னசேலம் அருகே இரவோடு இரவாக விடுதலை சிறுத்தைகள் கொடிக்கம்பம் அகற்றம்

Published On 2023-05-15 09:29 GMT   |   Update On 2023-05-15 09:29 GMT
  • பொது இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அனுமதி பெறாமல் கொடிக்கம்பத்தை நட்டனர்.
  • 10-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வாசுதேவனூர் பஸ் நிலையம் அருகே சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக உள்ள பொது இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அனுமதி பெறாமல் கொடிக்கம்பத்தை நட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த தாசில்தார் இந்திரா, கிராம நிர்வாக அலுவலர்கள், 10-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விடுதலை சிறுத்தைகள் க ட்சியினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தனபாலுக்கும் தாசில்தார் இந்திராவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சின்ன சேலம் போலீஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் தனபால் மீது தாசில்தார் இந்திரா புகார் அளித்தார். அதன் பிறகு நேற்று சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள தியாகனூர் பகுதியில் பவுத்த மாநாட்டிற்காக அவ்வழியே வந்த திருமாவளவன் கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றிவிட்டு சென்றார்.

அப்பொழுது ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு நேற்று இரவோடு இரவாக 10-க்கும் மேற்பட்ட போலீசா ருடன் தாசில்தார் இந்திரா விடுதலை சிறுத்தை கள் தலைவர் திருமா வளவன் ஏற்றிசென்ற கொடிக் கம்பத்தை அகற்றினார். இச்சம்ப வத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவிவருகிறது.

Tags:    

Similar News