உள்ளூர் செய்திகள்

மத்தூர் அருகே ரூ.1 லட்சம் கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

Published On 2022-10-31 09:34 GMT   |   Update On 2022-10-31 09:34 GMT
  • உரிய ஆவணங்கள் இன்றி கிரானைட் கற்கள் கடத்தி செல்லப்படுவது தெரிய வந்தது.
  • அந்த லாரியை மத்தூர் போலீசாரிடம் கனிம வள அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லம்பள்ளி பிரிவு சாலையில் கனிம வள அலுவலர் பொன்னுமணி தலைமையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக ஒரு லாரி வந்தது.

அதிகாரிகளை பார்த்ததும் லாரியை நிறுத்திவிட்டு அதை ஒட்டி வந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.இதையடுத்து அந்த லாரியை சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள் இன்றி கிரானைட் கற்கள் கடத்தி செல்லப்படுவது தெரிய வந்தது.

அந்த கற்களின் மதிப்பு ரூ.1 லட்சம் என்று கூறப்படுகிறது. கிரானைட் கற்களுடன் நிறுத்தப்பட்டிருந்த அந்த லாரியை மத்தூர் போலீசாரிடம் கனிம வள அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த லாரி யாருடையது? தப்பி ஓடிய டிரைவர் யார்?என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News