உள்ளூர் செய்திகள்

கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வு எழுதுவதற்காக மாணவிகள் வரிசையில் நிற்பதை படத்தில் காணலாம்.

கடலூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நீட் தேர்வு

Published On 2023-05-07 08:16 GMT   |   Update On 2023-05-07 08:16 GMT
  • 2023-24-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது.
  • மொத்தம் 4,602 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர்.

கடலூர்:

மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற படிப்புகளில் சேரு வதற்கு 'நீட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த தேர்வில் மாணவ-மாணவிகள் பெற்ற மதிப்பெண் அடிப் படையிலேயே இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது.நீட் தோ்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. இதில் கடலூர் மாவட்டத்தில் தேர்வு எழுத 4,602 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர்.

மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக மாவட்டத்தில் 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கடலூரில் 4 தேர்வு மையங்களிலும் விருத்தாசலம், பண்ருட்டி ஸ்ரீமுஷ்னம் என 4 மையங்களில் மொத்தம் 4,602 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர்.இந்த தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.

இதற்காக விண்ணப்பித்த மாணவ -மாணவிகள் காலை 11 மணி முதல் தேர்வு மையத்தில் அனுமதிக்கப் பட்டனர். தேர்வு நுழைவுச் சீட்டு, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டோ, அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டை, மாற்று திறனாளிகளாக இருந்தால் அதற்கான சான்று ஆகியவற்றை சரி பார்தது உள்ளே அனு மதித்தனர். அனைத்து தேர்வு மையங்களிலும் தடை யில்லா மின்சாரம் வழங்கு வதற்கும், தடை யில்லா இணைய வசதி மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதே போன்று தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

Tags:    

Similar News