பரப்பாடியில் ரூ.8 லட்சத்தில் புதிய பஸ் நிறுத்தம்-சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டினார்
- பரப்பாடி மற்றும் இளங்குளம் கிராமங்களில் 500 வீடுகளுக்கு தனிநபர் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்குதல் திட்டம் ரூ.21 லட்சம் மதிப்பில் சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
- புதுச்சேரி முதல் கோவங்குளம் வரை செல்லும் சாலையில் சிறிய பாலம் ரூ.32.84 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
நெல்லை:
பரப்பாடியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிறுத்தம், கழிப்பறை வசதியுடன் மற்றும் ஆட்டோ நிறுத்தம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணியை சபாநாயகர் அப்பாவு இன்று தொடங்கி வைத்தார்.
மேலும் பரப்பாடி மற்றும் இளங்குளம் கிராமங்களில் 500 வீடுகளுக்கு தனிநபர் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்குதல் திட்டம் ரூ.21 லட்சம் மதிப்பில் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி முதல் கோவங்குளம் வரை செல்லும் சாலையில் சிறிய பாலம் ரூ.32.84 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் பரப்பாடியில் ரூ. 9.50 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி கட்டிடத்தினையும் திறந்து வைத்து டி.வி.எஸ். அறக்கட்டளை மூலம் பரப்பாடி குளம் தூர்வாரும் பணிகளையும் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மூலக்கரைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமையில் சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்து வகுப்பில் நடத்தப்படும் பாட முறைகளை கேட்டு அறிந்து பார்வையிட்டார்கள்.
நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி .எஸ். ஆர். ஜெகதீஷ், நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய தலைவர் சவுமியாஆரோக்கிய எட்வின், நாங்குநேரி தாசில்தார் உட்பட பள்ளி மாணவ- மாணவிகள், பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.