உள்ளூர் செய்திகள்

வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியனுக்கு புதிய வாகனத்தை கலெக்டர் ரவிச்சந்திரன் வழங்கிய போது எடுத்த படம்.

தென்காசி மாவட்டத்தில் ஒன்றிய குழு தலைவர்களுக்கு புதிய கார்கள் - கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வழங்கினார்

Published On 2023-05-11 08:23 GMT   |   Update On 2023-05-11 08:23 GMT
  • புதிய வாகனங்களை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்களின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் அடையாளமாக 12 வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
  • அதனைத்தொடர்ந்து தென்காசி மாவட்ட கலெக்டர் வளாகத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்களுக்கு புதிய வாகனங்களை வழங்கினார்.

தென்காசி:

ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள், ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை கண்காணிக்கும் பொருட்டு கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது, 2008-ம் ஆண்டில் முதன்முதலாக வாகனங்கள் வழங்கப் பட்டன.

13 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது மீண்டும் தி.மு.க. அரசு தமிழகத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்தார்.

அதன்படி முதற்கட்ட மாக ரூ.25 கோடியே 40 லட்சம் மதிப்பிலான 200 புதிய வாகனங்களை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்களின் பயன் பாட்டிற்காக வழங்கிடும் அடையாளமாக 12 வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து தென்காசி மாவட்ட கலெக்டர் வளாகத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் திவ்யா (ஆலங்குளம்), சுப்பம்மாள் (கடையநல்லுர்), காவேரி (கீழப்பாவூர்), சங்கரபாண்டியன் (சங்கரன்கோவில்), பொன் முத்தையா பாண்டியன் (வாசுதேவநல்லுர்) ஆகியோருக்கு புதிய வாகனங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியா ளர் (வளர்ச்சி) முத்துக்கு மார், செய்தி மக்கள் தொடர்பு அலு வலர் இளவரசி மற்றும் அலுவலர்கள், வாசு தேவந ல்லூர் யூனியன் துணை சேர்மன் சந்திரமோகன், கவுன்சிலர் முனியராஜ், மணிகண்டன், விக்கி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News