உள்ளூர் செய்திகள்

புதிய மின்னூட்டி அமைப்பதற்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் அடிக்கல் நாட்டிய காட்சி.

தூத்துக்குடியில் 15 பகுதிகளுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க புதிய மின்னூட்டி - அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி அடிக்கல் நாட்டினார்

Published On 2022-09-18 06:55 GMT   |   Update On 2022-09-18 06:55 GMT
  • மில்லர் புரத்தில் புதிய மின்னூட்டி அமைப்பதற்கு பூமி பூஜை விழா நடைபெற்றது.
  • அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் ரூ. 33 லட்சம் மதிப்பீட்டில் உதய் திட்டத்தின் கீழ் மில்லர் புரத்தில் புதிய மின்னூட்டி அமைப்பதற்கு பூமி பூஜை விழா நடைபெற்றது.

சிப்காட் உபமின் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை பொறியாளர் செல்வக் குமார், மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள், செயற்பொறியாளர்கள் ரெ மோனா, வெங்கடேஸ்வரன், ராம் குமார், முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

தற்போது பயன்பாட்டில் உள்ள 22கிலோ வோல்ட் பண்டாரம்பட்டி மின்னூட்டியில் இருந்து மின்னூட்டம் வழங்கப்படும் சுமார் 23கி.மீ. தூரம் உள்ள உயரழுத்த மின் தொடர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு புதியதாக அமைக்கப்படும் 22 கிலோவோல்ட் மில்லர்புரம் மின்னூட்டி வழியாக சுமார் 11 கி.மீ. தூரமாக குறைக்கப்படுகிறது.இதன் காரணமாக மின்தடை நேரம் குறைக்கப்படுவதுடன், குறைந்த மின் அழுத்தம் பிரச்சனைகளும் சரி செய்யப்படும்.

இந்த மின்னூட்டி மூலம் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட மில்லர்புரம், பால்பாண்டி நகர், நிகிலேசன் நகர், புஷ்பாநகர், கதிர்வேல் நகர், ராஜீவ் நகர், சின்னமணி நகர், ராஜகோபால் நகர், குறிஞ்சி நகர், தேவர் காலனி, சின்னகண்ணுபுரம், பாரதி நகர், மீளவிட்டான் ஆகிய பகுதிகளில் உள்ள 12,756 மின்நுகர்வோர்கள் பயனடைவார்கள் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News