கோவையில் புதுப்பெண் முன்னாள் காதலனுடன் ஓட்டம்
- காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபரை பார்த்து அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்
கோவை
கோவை செல்வபுரத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே அவரது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபரை பார்த்து அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். திருமணமான ஒரு வாரத்தில் இளம்பெண் தனது முன்னாள் காதலனுடன் ஓட்டம் பிடித்தார். சென்னையில் தங்கி இருந்த அவரை அவரது பெற்றோர் மீட்டு அவரது கணவரிடம் ஒப்படைத்தனர்.
இந்தநிலையில் இளம்பெண் கர்ப்பமானார். சம்பவத்தன்று இளம்பெண்ணின் கணவர் வழக்கம் போல வேலைக்கு சென்றார். வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மீண்டும் தனது முன்னால் காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.
வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய இளம்பெண்ணின் கணவர் தனது மனைவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.