திருச்செந்தூர் அருகே புதிய ரேசன் கடை- நூலக கட்டிடம் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்
- சண்முகபுரத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட உள்ள ரேசன் கடை கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
- இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் யூனி யனுக்கு உட்பட்ட வீரபாண்டியன் பட்டினம் ரூரல் ஊராட்சி சண்முக புரத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய தாக கட்டப் பட உள்ள ரேசன் கடை கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதில் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து சண்முகபுரம் காந்திநகர் பகுதியில் புதியதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியை திறந்து வைத்தார். மேலும் திருச்செந்தூர் யூனியனுக்கு உட்பட்ட பள்ளிபத்து ஊராட்சி செங்குழியில் ரூ.14 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட உள்ள நூலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினர்.
நிகழ்ச்சிகளில் ஆர்.டி.ஓ. குருச்சந்திரன், தாசில்தார் வாமனன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, ஆறுமுகநேரி பேரூராட்சி துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், தி.மு.க. மாநில வர்த்தகரணி இணை செயலாளர் உமரிசங்கர், ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.