நத்தத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு
- நத்தம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் புதிய ரேசன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது.
- கோசுகுறிச்சி, அரவங்குறிச்சி அரசு மேல்நிலை பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கபட்டது.
நத்தம்:
நத்தம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் புதிய ரேசன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டிஅம்பலம் தலைமை தாங்கினார். தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிச்சாமி, நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர்பாட்சா, நகர செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வேலுச்சாமி எம்.பி. கலந்து கொண்டு புதிய ரேசன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கி பேசினார். இதில் தாசில்தார் ராமையா, யூனியன் ஆணையாளர்கள் சுமதி, பத்மாவதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார்சாமி, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட சுற்றுசூழல் அணி தலைவர் ராஜகோபால், கவுன்சிலர்கள் இஸ்மாயில், பாக்கியலட்சுமி சிவஞானம், மாவட்ட பிரதிநிதிகள் குடகிப்பட்டி அழகர்சாமி, சிறுகுடி சேக்சிக்கந்தர், தகவல் தொழில்நுட்ப மாவட்ட அமைப்பாளர் மணி, வடக்கு ஒன்றிய பொருளாளர் கலிபுல்லா, நத்தம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் அய்யாபட்டி வாசுதேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதைப்போலவே துவராபதி, சிறுகுடி- மஞ்சநாயக்கன்பட்டி, குட்டுப்பட்டி-பெரிய மலையூர், சேத்தூர்-சின்னமுளையூர் பகுதிகளிலும் புதிய ரேசன் கடைகள் திறக்கபட்டது. முன்னதாக கோசுகுறிச்சி, அரவங்குறிச்சி அரசு மேல்நிலை பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கபட்டது.