உள்ளூர் செய்திகள்

உடன்குடி யூனியனில் ரூ.1.68 கோடியில் புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டும் பணி

Published On 2023-02-05 09:06 GMT   |   Update On 2023-02-05 09:06 GMT
  • 6 அரசுப் பள்ளிகளுக்கு கட்டிடம் கட்ட காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
  • உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

உடன்குடி:

உடன்குடி யூனியனில் ரூ1.68கோடி மதிப்பீட்டில் 6 அரசுப் பள்ளிகளுக்கு கட்டிடம் கட்ட முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து பணிகள் தொடஙகப்பட்டது. உடன்குடி யூனியனுக்குட்பட்ட ராமசாமிபுரம், தைக்காவூர், செம்மறிக்குளம், குமாரசாமிபுரம், சிவலூர், அத்தியடிதட்டு ஆகிய 6 இடங்களில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்பபள்ளிகளின் கட்டிடங்கள் மிகவும் சிதிலமடைந்து இருப்பதாக ஆய்வு செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த பள்ளிகளுக்கு தலா ரூ.28லட்சம் மதிப்பீட்டில் 6 புதிய கட்டிடங்கள் கட்டிட முதல்-அமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து பள்ளிகட்டிடங்கள் கட்டுவதற்கு அளவீடு செய்யப்பட்டு பணிகளை உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாண்சிராணி, பொறியாளர் ஜெயபால், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News