உள்ளூர் செய்திகள்

கடையம் பெரும்பத்து ஊராட்சியில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய புதிய மின்மாற்றி- கலெக்டரிடம், பஞ்சாயத்து தலைவர் மனு

Published On 2023-08-05 08:50 GMT   |   Update On 2023-08-05 08:50 GMT
  • ராமநதி அணை அருகில் ஊராட்சிக்கு சொந்தமான 3 திறந்தவெளி கிணறுகள் உள்ளன.
  • காற்று வேகமாக வீசுவதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மோட்டார் இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது.

கடையம்:

கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன், தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனிடம் நேரில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடையம் பெரும்பத்து ஊராட்சியில் 14 குக்கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் விவசாயம் சார்ந்த மக்களிடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன. இந்த நிலையில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ராமநதி அணை அருகில் சூச்சமுடையார் கோவிலுக்கு தென்புறம் ஊராட்சிக்கு சொந்தமான 3 திறந்தவெளி கிணறுகள் உள்ளன. இக்கிணற்றில் விசை பம்புகள் மூலம் மோட்டார்கள் இயக்கப்பட்டு பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மோட்டார்களை இயக்க மின்சாரம் பழைய மின்மாற்றி மூலம் சீரின்றி வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் தற்போது காற்று வேகமாக வீசுவதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மோட்டார் இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி, பழைய மின்மாற்றியை அகற்றிவிட்டு புதிய மின்மாற்றி அமைக்கவும், கடையத்திலிருந்து கிழமேலாக மின்தடத்தை கொண்டு வந்து , புதிய மின்மாற்றி அமைத்து பொதுமக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேன்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மனுவை பெற்ற கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அப்போது கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகியும், தொழிலதிபருமான பரமசிவன் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News