உள்ளூர் செய்திகள்

மறியலில் ஈடுப்பட்டவர்களை போலீசார் கைது செய்தபோது எடுத்தப்படம்.

என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு: சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல்

Published On 2022-09-22 09:33 GMT   |   Update On 2022-09-22 09:33 GMT
  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கத்துறையினர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
  • சாலை மறியலில் ஈடுபட்டு அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் குண்டுகட்டாக தூக்கி சென்று 9 பேரை கைது செய்தனர்.

சேலம்:

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கத்துறையினர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தந்த பகுதிகளில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் பைரோஸ்கான் தலைமையில் நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர் . ஆனால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் குண்டுகட்டாக தூக்கி சென்று 9 பேரை கைது செய்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News