உள்ளூர் செய்திகள்

நீலகிரி புத்தக திருவிழா-24 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை

Published On 2023-03-15 09:17 GMT   |   Update On 2023-03-15 09:17 GMT
  • ரூ.10 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது
  • புத்தக கண்காட்சியை கடந்த 5-ந் தேதி தொடங்கியது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் புத்தக திருவிழா நடந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியை கடந்த 5-ந் தேதி ஆ.ராசா எம்.பி. தொடங்கி வைத்தார்.

தினந்தோறும் கலை நிகழ்ச்சிகள், சொற் பொழிவுகள், பட்டி மன்றம், சொற் பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

10-ம் நாளான நேற்று சிந்தனை கவிஞர் கவிதாசன், வெல்வதற்கே வாழ்க்கை என்ற தலைப்பிலும், நடிகரும், தமிழ் இலக்கிய பேச்சாளருமான மல்லூரி தமிழ் எங்கள் ஞானச்செருக்கு என்ற தலைப்பிலும் பேசினார்கள்.

புத்தக கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் திரண்டு வந்து பார்வை யிட்டு வருகிறார்கள். மேலும் தங்களுக்கு விருப்பமான புத்த கங்களையும் தேர்வு செய்து வாங்கிச் செல்கிறார்கள்.

கடந்த 5-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை புத்தக திருவிழாவில் ரூ.10.70 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்றுள்ளன. சுமார் 24 ஆயிரத்து 95 பார்வையாளர்கள் பார்வை யிட்டு உள்ளனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி, மாவட்ட நூலக அலுவலர் வசந்த மல்லிகா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கண்ணன், மாவட்ட கருவூல அலுவலர் சங்கரநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News