உள்ளூர் செய்திகள்

காராமணிக்குப்பத்தில் சாலை விரிவாக்க பணியின் போது இடிக்கப்பட்ட கோவிலுக்கு பணம் தரவில்லை: பொதுமக்கள் புகார்

Published On 2023-05-29 08:12 GMT   |   Update On 2023-05-29 08:12 GMT
  • காராமணிக்குப்பம் குளக்கரை குப்பத்தில் மிகவும் பழமை வாய்ந்த சிந்தாமணி விநாயகர் கோவில் உள்ளது.
  • விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலூர்:

கடலூர் அடுத்த காராமணிக் குப்பம் பகுதியை சேர்ந்த பொது மக்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது-

கடலூர் - பண்ருட்டி மெயின் ரோட்டில் காராமணிக்குப்பம் குளக்கரை குப்பத்தில் மிகவும் பழமை வாய்ந்த சிந்தாமணி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலை கடந்த 2002 -ம் ஆண்டு புதிதாக கும்பாபிஷேகம் நடைபெற்று பராமரித்து வந்தனர். தற்போது கடலூர் - மடப்பட்டு சாலை விரிவாக்க பணியின் போது கோவிலை இடித்து விட்டு அதனை கட்டித் தருவதாக தெரிவித்தனர். ஆனால் இந்து அறநிலை துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் அவர்களிடம்இருந்து பணம் வாங்கி தருகிறோம் என தெரிவித்தனர். ஆனால் இது நாள் வரை கோவில் கட்டுவதற்கு பணம் வழங்கவில்லை. இது சம்பந்தமாக விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News