கூட்டுறவு பண்டகசாலையின் சுயசேவைபிரிவு மருந்தகங்களில் அதிகாரி ஆய்வு
- மைக்ரோ ஏ.டி.எம். மூலமாக பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டைகள் மூலம் கடன் வழங்கப்பட்டது.
- கூட்டுப்பொறுப்புக்குழுக்களை சேர்ந்த 10 பேருக்கு ரூ.4.50 லட்சம் கடன் வழங்கப்பட்டது.
சுவாமிமலை:
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் நாகேஸ்வரன் வடக்கு வீதியில் உள்ள சந்திரசேகரபுரம் கூட்டுறவு மொத்த விற்பனை அங்காடியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
பண்டகசாலையின் சுயசேவைபிரிவு மருந்தகங்கள் மற்றும் அலுவலகத்தை ஆய்வு மேற்கொண்டு கும்பகோணம் பகுதி மக்களுக்கு சிறப்பான சேவையாற்றி வருவதாக பாராட்டினார்.
முன்னதாக, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு வருகை தந்த ராதாகிருஷ்ணன், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் பேங்க் ஆன் வீல்ஸ் வேன்-ஐ தொடக்கி வைத்து, மைக்ரோ ஏ.டி.எம். மூலமாக பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டைகள் மூலம் கடன் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, வங்கியின் தலைமை கிளை மூலம் 6 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 70 பேருக்கு ரூ.12 லட்சமும், 2 கூட்டுப்பொறுப்புக்குழுக்களை சேர்ந்த 10 பேருக்கு ரூ.4.50 லட்சமும் கடன் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வங்கி தலைவர் ஆசைமணி, தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, வங்கி மேலாண்மை இயக்குநர் பெரியசாமி, தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் பழனீஸ்வரி, முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, வங்கி முதன்மை வருவாய் அலுவலர் ஜெகத்ரட்சகன், பண்டகசாலை தலைவர் அயூப்கான், பண்டகசாலையின் துணைப்பதிவாளரும் மேலாண்மை இயக்குனருமான சிவசுப்பிரமணியன் மற்றும் துணைப்பதிவாளர்கள் தயாள விநாயக அமல்ராஜ், அட்சயப்பிரியா, கருப்பையா, வங்கியின் உதவி பொது மேலாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.