அய்யலூரில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிய அதிகாரிகள் போலீசார் குவிப்பு
- திண்டுக்கல்-திருச்சி 4 வழிச்சாலை அய்யலூர் மேம்பாலம் அடியிலும், புறவழிச்சாலையிலும் ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தன.
- திடீரென ஏராளமான போலீசார் குவிக்க ப்பட்டதால் அய்யலூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வடமதுரை:
திண்டுக்கல்-திருச்சி 4 வழிச்சாலை அய்யலூர் மேம்பாலம் அடியிலும், புறவழிச்சாலையிலும் ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவேண்டும் என பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலைத்துறை யினரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதனைதொடர்ந்து ஆக்கிரமிப்பு கடைக்கா ரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு 6 நாட்களுக்குள் கடைகளை அகற்றிக்கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டது. சிலர் தாங்களாகவே முன்வந்து கடைகளை அகற்றிக்கொ ண்டனர். இந்த நிலையில் இன்று ஆக்கிரமிப்பு கடை களை நெடுஞ்சாலைத்துறை யினர் அகற்ற வந்தனர். மேலாளர் செந்தில்குமரன், சங்கர், என்ஜீனியர் சூர்யா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பாதுகாப்புக்காக திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் வேடசந்தூர் டி.எஸ்.பி துர்காதேவி, கூடுதல் துணை மண்டல கண்காணிப்பாளர் வெள்ளைச்சாமி தலைமை யில் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
திடீரென ஏராளமான போலீசார் குவிக்க ப்பட்டதால் அய்யலூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.