கிருஷ்ணகிரியில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி இருசக்கர வாகனப்பேரணி
- பேரணியின் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெருமாள்சாமி தலைமை தாங்கினார்.
- புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி, காந்தி சிலை வழியாகஅரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சென்றடைந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்திஇருசக்கர வாகன பேரணி நடந்தது.
இந்த பேரணியின் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெருமாள்சாமி தலைமை தாங்கினார், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் துணைத் தலைவர் திருநாவுக்கரசு, மாவட்ட மகளிர் பிரிவு செயலாளர் சூசன்பெட்ரியியா, மாநில துணைச் செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட தலைவர் தானப்பன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சிவா வரவேற்புரையாற்றினார்.
தமிழ்நாடு அரசு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில அமைப்புச் செயலாளர் நாராயணன்,மாநில தணிக்கையாளர் ராமமூர்த்தி ஆகியோர் தொடக்கவுரையாற்றினர். நிர்வாகிகள் தங்கதுரை,ஜெகதீசன், ராஜேஸ்குமார், கார்த்திக்ராஜா, ஈஸ்வரி ஆகியோர் பிரச்சார உரையாற்றினார்.மாநில துணைச் செயலாளர் சந்திரசேகரன், மாதப்பன் ஆகியோர் நிறைவுரையாற்றினர்.மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.இந்த பேரணியானது, கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி, காந்தி சிலை வழியாகஅரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சென்றடைந்தது.
இந்த பேரணியின் போது, 3, 5, 8-ம்வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு, 9, 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பருவத்தேர்வு என்பது நாட்டின்ஏழை, எளிய கிராமப்புறத் குழந்தைகளின் கல்வி வாய்ப்பைத் தட்டிப் பறிப்பதோடு, மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும். தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டுவரும் நிலையில், அது பற்றி தேசிய கல்விக் கொள்கையில் இல்லாதது இட ஒதுக்கீட்டுப்பிரிவினரின் கல்வி வாய்ப்பை மிக கடுமையாக பாதிக்கும். மும்மொழிக் கொள்கை என்பது கல்விச் சுமையை அதிகரிப்பதோடு, தாய்மொழி வழிக் கல்வியை கேள்விக்குறியாக்கும். இது போன்ற கோரிக்கைகளை தேச நலன், ஊழியர் நலன் கருதி மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.