உள்ளூர் செய்திகள்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் முதியோா், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் பூங்காவை சுற்றிப்பாா்க்க வசதியாக, பேட்டரி காா்

Published On 2023-10-10 09:29 GMT   |   Update On 2023-10-10 09:29 GMT
  • சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ள பேட்டரிகாருக்கு கட்டணம் நிர்ணயம்
  • 2 கி.மீ.வரை சுற்றிப்பாா்க்க நபா் ஒருவருக்கு தலா ரூ.30

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இங்கு வரும் முதியோா், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் பூங்காவை சுற்றிப்பாா்க்க வசதியாக, சுற்றுச் சூழலை பாதிக்காத வகையில் பேட்டரி காா் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இதன் மூலம் பூங்காவை 2 கி.மீ.வரை சுற்றிப்பாா்க்க நபா் ஒருவருக்கு தலா ரூ.30 வீதம் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டு உள்ளதாக தோட்டக்கலை இணைஇயக்குநா் சிபிலாமேரி தெரிவித்து உள்ளாா்.

Tags:    

Similar News