ஊட்டி நகராட்சி தலைவர்-உறுப்பினர்கள் கலெக்டரிடம் மனு ஊட்டி நகராட்சி தலைவர்-உறுப்பினர்கள் கலெக்டரிடம் மனு
- உரிமையை ஊட்டி நகரமன்றத்திற்கு மீண்டும் வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
- அரசிற்கு பரிந்துரை செய்து நிதியினை பெற்றுத்தர வேண்டும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊட்டி நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி மற்றும் துணை தலைவர் ரவிகுமார் தலைமையில் நகரமன்ற உறுப்பினர்கள் கலெக்டரை சந்தித்து நகராட்சியில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய வளர்ச்சி பணிகள் குறித்த மனுவினை வழங்கினர். அந்த மனுவில் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியினை எளிதில் பெற ஏதுவாக 1500 சதுரடி வரையிலான கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதி வழங்கும் உரிமையை ஊட்டி நகரமன்றத்திற்கு மீண்டும் வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பெய்து வந்த கன மழை காரணமாக அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தடுப்புசுவர்கள், மழை நீர் கால்வாய்கள் சேதமடைந்துள்ளது. இவற்றை சரிசெய்திட சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய அரசிற்கு பரிந்துரை செய்து நிதியினை பெற்றுத்தர வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியில் ஊட்டி நகர மன்ற உறுப்பினர்கள் ஜார்ஜ், முஸ்தபா, எல்கில் ரவி, தம்பி இஸ்மாயில், ரமேஷ், கீதா, நாகமணி, ரீட்டா, விஷ்னுபிரபு, ரகுபதி, கஜேந்திரன், செல்வராஜ், திவ்யா, மீனா, பிளோரினா, மேரி பிளோரினா, வினோதினி, வனிதா, அனிதாலட்சுமி, விசாலாட்சி, அபுதாகீர், நாதன், நாகராஜ், ரஜினிகாந்த், உமா நித்யசத்யா, ராஜலட்சுமி, ராஜேஸ்வரி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.