ஆறுமுகநேரியில் புதிய ரேஷன் கடை திறப்பு
- ஆறுமுகநேரி 6-வது வார்டு திசைக்காவல் தெற்கு தெருவில் உள்ள பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்க வெகு தூரம் செல்ல வேண்டியது இருந்தது.
- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து புதிதாக ரேஷன் கடை கட்டிடத்தை அமைக்க ஏற்பாடு செய்திருந்தார்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி 6-வது வார்டு திசைக்காவல் தெற்கு தெருவில் உள்ள பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்க வெகு தூரம் செல்ல வேண்டியது இருந்தது. இதனால் சிரமப்பட்ட அவர்கள் தங்கள் பகுதியிலேயே புதிய ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து புதிதாக ரேஷன் கடை கட்டிடத்தை அமைக்க ஏற்பாடு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து அங்கு புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது.
ஆறுமுகநேரி பேரூராட்சி துணை தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். 6-வது வார்டு கவுன்சிலர் தீபா முன்னிலை வகித்தார். நியாயவிலைக் கடை அலுவலர் கலைவாணன் வரவேற்று பேசினார்.
பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். விழாவில் வார்டு கவுன்சிலர்கள் வெங்கடேசன், ஆறுமுகநயினார், முன்னாள் கவுன்சிலர் மகாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.