கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ பள்ளியில் ஒயிலாட்டம் நிகழ்ச்சி
- கலைக்குழுவினரின் தமிழர் பாரம்பரிய கலையான ஒயிலாட்டம் நிகழ்ச்சி நடந்தது.
- வேளாங்கண்ணி கல்வி குழுமங்களின் தாளாளர் கூத்தரசன் முன்னிலை வகித்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ பள்ளியில், இந்திய தேசத்தின் சுதந்திர அமுத பெருவிழாவை முன்னிட்டு, வேளாங்கண்ணி கல்வி குழுமம் மற்றும் ஓசூர் செயின்ட்பீட்டர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இணைந்து நடத்திய கோவை கருமத்தம்பட்டி சங்கமம் கலைக்குழுவினரின் தமிழர் பாரம்பரிய கலையான ஒயிலாட்டம் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியை செயின்ட் பீட்டர்ஸ், அதியமான் கல்லூரி மற்றும் வேளாங்கண்ணி கல்வி குழுமங்களின் நிறுவனர் டாக்டர். தம்பிதுரை எம்பி., தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். வேளாங்கண்ணி கல்வி குழுமங்களின் தாளாளர் கூத்தரசன் முன்னிலை வகித்தார்.
இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்ட ஒயிலாட்டம் கலைஞர்கள் பங்கேற்று நடனமாடினர்.
இந்த நிகழ்ச்சியினை பள்ளியின் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர்.
முடிவில் கலைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் மற்றும் குழுவினருக்கு தம்பிதுரை எம்பி., நினைவு பரிசுகளை வழங்கி, நிகழ்ச்சியினை சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு காணிக்காயக்குவதாக கூறினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் பர்கூர் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் பர்கூர் ஜெயபால், வேப்பனஹள்ளி முனியப்பன், வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ பள்ளியின் முதல்வர் மற்றும் இயக்குநரான விஜயலட்சுமி, அறிஞர் அண்ணா கல்லூரியின் முதல்வர் தனபால் மற்றும் சாதிக், வேலாயுதம், தொழிலதிபர் ரகுராம், வேளாங்கண்ணி பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாங்கண்ணி பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.