பழனி உழவர் சந்தையில் ஆக்கிரமிப்பு கடைகள் நகராட்சி மூலம் அகற்றம்
- தங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கடந்த மாதம் உழவர் சந்தை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றி அங்கிருந்த பொருட்களை அள்ளிச் சென்றனர்.
பழனி:
பழனி உழவர் சந்தையில் சுமார் 60 க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் இங்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். ஆனால் உழவர் சந்தையின் பின்புறம் மற்றும் முன்புறத்தில் சாலையோரம் காய்கறி கடைகள் ஏராளமானோர் அமைத்திருந்தனர்.
இதனால் சந்தைக்குள் வராமல் வெளியிலேயே பொதுமக்கள் காய்கறிகளை வாங்கி சென்றனர். இதனால் தங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கடந்த மாதம் உழவர் சந்ைத வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர். இந்நிலையில் உழவர் சந்தை அருகில் உள்ள ஆக்கிரமிப்பு காய்கறி கடைகள் இன்று அகற்றப்படும் என்று நகராட்சி நிர்வாகம் மூலம் அறிவிப்பு வெளியிடப்ப ட்டது.
இதனைத் தொடர்ந்து பெரும்பாலான கடைகள் இன்று அமைக்கப்பட வில்லை. குறைந்த அளவு இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றி அங்கிருந்த பொருட்களை அள்ளிச் சென்றனர்.
இதேபோல் மீண்டும் இங்கு கடைகள் அமைக்கா தவாறு அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவர் சந்தை வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.