உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேக விழாவில் கலசத்திற்கு புனிதநீர் ஊற்றுவதையும், திரளாக கலந்து கொண்ட பக்தர்களையும் படத்தில் காணலாம்.

பாப்பாக்குடி மூன்றீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-01-28 09:01 GMT   |   Update On 2023-01-28 09:01 GMT
  • திருக்கடுகை மூன்றீஸ்வரர் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
  • கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 4-ம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது.

முக்கூடல்:

பாப்பாக்குடியில் உள்ள ஸ்ரீ திருக்கடுகை மூன்றீஸ்வரர் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.

கடந்த புதன்கிழமை காலை முதல் மகா கணபதி ஹோமம், நவகிரக பூஜை, வாஸ்து சாந்தி பூஜை ஹோமம், கங்கா பூஜை, சிவ சூரிய பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து வியாழக்கிழமை மங்கள இசை, திருமுறை பாராயணம், வேதா பாராயணம், எந்திர பூஜை, ஜெபம், 2-ம் கால யாகசாலை பூஜை, நேற்று மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலை 6 மணிக்கு 4-ம் கால யாக சாலை பூஜை, சிவசூரிய பூஜை, ஹோம பூஜை, தோரண பூஜை, வேதிகா பூஜை, அர்ச்சனை யாக ஹோமம், தீபாரதனை, யாத்ரா தானம், கும்பம் எழுந்தருளுதல், தொடர்ந்து விமான கும்பாபிஷேகம், பிரதான மூர்த்தி பரிவார மூர்த்தி களுக்கு கும்ப லக்னத்தில் பெருங்குளம் செங்கோல் ஆதீனம் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து 21 திரவியங்களால் மகா அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, தீபாரதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. பகல் 12 மணிக்கு மகேஸ்வர பூஜை, அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ., அறநிலையத்துறை செயல் அலுவலர் ரேவதி, தக்கார் கோமதி, ஆய்வாளர் சந்தான லெட்சுமி, பாப்பாக்குடி கிராம மகாஜனங்கள், பாப்பாக்குடி தி.மு.க. ஒன்றிய செயலாளரும் யூனியன் துணை சேர்மனுமான மாரிவண்ணமுத்து, பாப்பாக்குடி பஞ்சாயத்து தலைவர் ஆணைக்குட்டி பாண்டியன் உட்பட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் அய்யாதுரை தலைமையிலான அ.தி.மு.க.வினர் எம்.எல்.ஏ. மனோஜ்பாண்டியனுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பாப்பாக்குடி மற்றும் சுற்றுப்புற வட்டாரத்தில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலயம் கட்டப்பட்டு 600 ஆண்டுகளுக்கு மேலாகிறது. மேலும் 22 ஆண்டுகளுக்கு பின்பு தற்பொழுது கும்பாபி ஷேகம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News