உள்ளூர் செய்திகள்

சேடப்பள்ளம் ஏரி கரைகள் செப்பனிடப்பட்டுள்ளதை கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.

கடலூர் அருகே சேடப்பள்ளம் ஏரி கரைகளை செப்பனிடும் பணி:கலெக்டர் பாலசுப்ரமணியம் ஆய்வு

Published On 2023-04-09 07:06 GMT   |   Update On 2023-04-09 07:06 GMT
  • கோதண்டராமபுரம் கிரா மத்தில் அமைந்துள்ள சேடப் பள்ளமேரி நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
  • ஆழ்துளை கிணறுகள் இதன் மூலம் பாசன வசதி பெரும் என தெரிவித்தார்.

கடலூர்:

கடலூரை அடுத்த கோதண்டராமபுரம் கிராமத்தில் சேடப்பள்ளம் ஏரியை தனியார் நிறுவனம் மூலம் கரைகள் பலப் படுத்தப்பட்டது. இதனை கலெக்டர் பாலசுப்ர மணியம் பார்வையிட்டு ஆய்வு செய்து பேசினார். அவர் பேசும் போது, கோதண்டராமபுரம் கிரா மத்தில் அமைந்துள்ள சேடப் பள்ளமேரி நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரியை 18.67 லட்சம் மதிப்பீட்டில், 720 மீட்டர் நீளம் மண்கரை செப்பனி டப்பட்டுள்ளது. 1939 சதுர மீட்டர் அளவில் கரை சேதம் ஏற்படாத வகையில் அமைக்கப் பட்டுள்ளது. 360 மீட்டர் நீளமுள்ள நீர் வரத்து வாய்க்கால் செப்பனிடப் பட்டு ஏரிக்கு தண்ணீர் தடை இன்றி வர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சேடப்பள்ளம் ஏரியின் கீழ் 65 ஹெக்டர் நிலங்கள் மற்றும் பெரியகாட்டுசாகை, அனுக்கம்பட்டு கிராமங்க ளில் உள்ள சுமார் 18 திறந்த வெளி கிணறுகள் மற்றும் 42 ஆழ்துளை கிணறுகள் இதன் மூலம் பாசன வசதி பெரும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அலுவலர்கள், மற்றும் அப்பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News