வனதுர்க்கை அம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை
- புனித நீர் அடங்கிய குடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
- வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் சேர்ந்த தோப்புத்துறை பகுதியில் அமைந்துள்ளது வனதுர்க்கை அம்மன் கோவில். இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்த சிறப்புடைய கோவில். இந்த கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை அம்மனுக்கு புனித நீர் அடங்கிய கலசங்கள் வைத்து யாகம் வளர்த்து சிறப்பு பூஜை நடைபெற்றது. புனித நீர் அடங்கிய குடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்பு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
இதுபோல் வேதாரண்யம் நகரில் மேல வீதியில் அமைந்துள்ளது மாணிக்கவாசகர் மடம். இந்த மடத்தில் அமைந்துள்ள மாணிக்கவாசக சுவாமிக்கு பவுர்ணமியை முன்னிட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப தூப ஆராதனை செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் விக்னேஸ்வரன் தலைமையில் பக்தர்கள் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களை பாடி மாணிக்கவாசகரை வழிபாடு செய்தனர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க–ப்பட்டது. நிகழ்ச்சியில் மாணிக்கவாசகர் மடம் தர்மகத்தா யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவந்தி நாத பண்டார சன்னதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதுபோல் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட வேம்ப தேவன்காடு தெற்கு பகுதி அமைந்துள்ளது மௌன சித்தர் பீடம். இந்த சித்தர் பீடத்தில் தினசரி பூஜைகள் உடன் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகானுக்கு பிடித்தமான பலகாரங்கள், பொங்கல் வைத்து படையல் செய்து அங்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவது வழக்கம். நேற்று பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்களே சித்தர் பீடத்துக்கு வந்து தியானம் மேற்கொண்டு வழிபாடு நடத்தினர். பவுர்ணமியை முன்னிட்டு கடல் அன்னைக்கு பக்தர்கள் தீப ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.