உள்ளூர் செய்திகள்

வாழப்பாடி அருகே கூட்டம் கூட்டமாக திரியும் மயில்கள்: மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை

Published On 2024-09-09 06:00 GMT   |   Update On 2024-09-09 06:00 GMT
  • மயில்கள் விளைநிலங்களில் வட்டமடித்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
  • உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி, பேளூர், படையாச்சியூர், புழுதிக்குட்டை, பெரியகுட்டிமடுவு, கொட்டவாடி, கல்லாயணகிரி, சிங்கிபுரம், சோமம்பட்டி, இடையப்பட்டி, கல்லேரிப்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வனப்பகுதிகள் ஆறு, ஏரி, நீரோடை உள்ளிட்ட நீர்நிலைகள், மலை குன்றுகள், தரிசு நிலங்களில் மட்டுமின்றி, கிராமப்புறங்களில் விவசாயிகளின் விளைநிலங்களிலும், கடந்த சில ஆண்டுகளாக மயில்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

இதனால் விளை நிலங்களில் மட்டுமின்றி குடியிருப்பு பகுதிகளிலும் கூட மயில்கள் சர்வ சாதரணமாக கூட்டம் கூட்டமாய் திரிகின்றன.


விளைநிலங்களில் நெல், கம்பு, சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட உணவு தானியங்கள் மற்றும் பிற விவசாய விளை பொருட்கள் பயிரிடப்படுகிறது. இவற்றை மயில்கள் சேதப்படுத்துவதால் மகசூல் பாதிக்கப்படுகிறது.

குறிப்பாக, படையாச்சியூர், கொட்டவாடி கிராமங்களில் கூட்டம் கூட்டமாக 100-க்கும் மேற்பட்ட மயில்கள் விளைநிலங்களில் வட்டமடித்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வாழப்பாடி மற்றும் தும்பல் வனச்சரக வனத்து றையினர் மயில்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்தி, கிராமப்புற விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி வரும் மயில்களை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கும் சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாழப்பாடி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் வட்டார விவசாயிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து கொட்டவாடி கிராமத்தை விவசாயிகள் கூறுகையில், விவசாயிகளை வயல்வெளியில் கூட்டமாக உள்ள மயில்கள் சிறிதும் பயமின்றி துரத்துகின்றன. இதனால் மயில்களைக் கண்டால் குழந்தைகள் அருகில் செல்வதற்கு தயங்குகின்றனர். இதற்கு தீர்வு காண சேலம் மாவட்ட நிர்வாகமும், வனத்துறையினரும் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News