உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

கொடைக்கானலில் தினசரி 20 முறைக்கு மேல் மின்வெட்டால் மக்கள் அவதி

Published On 2022-12-22 05:17 GMT   |   Update On 2022-12-22 05:17 GMT
  • கொடைக்கானல் நகர்மற்றும் மலைகிராமங்களில் தினசரி 20 முறைக்கு மேல் மின்வெட்டு ஏற்படுகிறது.
  • 40 கி.மீ சுற்றளவுக்கு ஒரே துணைமின்நிலையம் இருப்பதால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதில் மின்வாரிய ஊழியர்களும் சிரமம் அடைந்து வருகின்றனர்

கொடைக்கானல்:

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த மாத இறுதியில் 7 டிகிரி செல்சியசுக்கு கீழ் வெப்பநிலை குறைந்ததால் பல இடங்களில் உறைபனி ஏற்படும் சூழல் ஏற்பட்டது. அதன்பிறகு பெய்த மழை காரணமாக இயல்பு நிலைக்கு திரும்பியது.

தற்போது மழை முற்றிலும் நின்றுவிட்ட நிலையில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொடைக்கானல் நகர்மற்றும் மலைகிராமங்களில் தினசரி 20 முறைக்கு மேல் மின்வெட்டு ஏற்படுகிறது.

கொடைக்கானலில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் காலை 8 மணிக்கே தயாராகிவிடவேண்டும். ஆனால் அதற்குள்ளாகவே 4 முறை மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு தேவையான உணவு தயாரித்து கொடுப்பதிலும், சுடுதண்ணீர் வைப்பதற்குகூட இயலாமல் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் தவித்து வருகின்றனர்.

பகல் நேரங்களிலும் இதேபோல் மின்வெட்டு ஏற்படுவதோடு மாலை நேரங்களிலும் தொடர்கிறது. தற்போது அரையாண்டுத்தேர்வு நடந்து வரும் நிலையில் தேர்வுக்கு தயாராக முடியாத நிலையில் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் வயதான முதியவர்கள், நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டாலும் உரிய பதில் கிடைப்பதில்லை. எனவே முன்னறிவிப்பின்றி நடக்கும் மின்வெட்டை போக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் 40 கி.மீ சுற்றளவுக்கு ஒரே துணைமின்நிலையம் இருப்பதால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதில் மின்வாரிய ஊழியர்களும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் கூடுதல் மின்நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News