உள்ளூர் செய்திகள்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு

Published On 2023-04-05 10:00 GMT   |   Update On 2023-04-05 10:00 GMT
  • 8,193 பேர் 41 மையங்களில் எழுதவுள்ளனர்
  • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது.

பெரம்பலூர்:

தமிழகத்தில் நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று முன்தினம் முடிவடைந்தது. பிளஸ்-1 வகுப்புக்கு இன்றுடன் (புதன்கிழமை) தேர்வு முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்புக்கு நாளை (வியாழக்கிழமை) அரசு பொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை 143 பள்ளிகளை சேர்ந்த 4,288 மாணவர்களும், 3,905 மாணவிகளும் என மொத்தம் 8,193 பேர் 41 மையங்களில் எழுதவுள்ளனர். பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களுக்கு குலுக்கல் முறையில் பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அனைத்து தேர்வு மையங்களிலும் போதிய அடிப்படை வசதிகள், மாணவ-மாணவிகள் தேர்வு மையங்களுக்கு எளிதில் சென்று வர போதிய பஸ் வசதிகள், வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல போதிய போலீஸ் பாதுகாப்பு என அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News